Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஜனவரி 13 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று காலை பெண் ஒருவரின் சடலம் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுதுமலை தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த சின்னராசா நாகரத்தினம் (வயது 70) என்ற வயோதிபப் பெண்மணியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் இன்று அதிகாலை முதல் காணாமல் போயிருந்தார். எனவும் 10 மணியளவில் கிணற்றிலிருந்து இவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டனர். இது தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
20 minute ago
58 minute ago
1 hours ago