2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

குற்றச்செயல்கள் குறைவு: யாழ். பொலிஸ் அத்தியட்சகர்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்திருந்த  கொள்ளைச் சம்பவங்கள்  தற்போது  குறைவடைந்து வருவதாக யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார.;

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இரவு, பகல் வேளைகளில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும்; ரோந்து நடவடிக்கையின் காரணமாகவே குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன. அத்துடன், யாழ்ப்பாண மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக் காரணமாக பல குற்றவாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களெனவும் நெவில் பத்மதேவா குறிப்பிட்டார்.

யாழ். இளைஞர்கள் தங்களது கைத்தொலைபேசிகளில் ஆபாசப் படங்கள் எதனையும் வைத்திருக்க வேண்டாம.; அவ்வாறு வைத்திருந்தால் சட்டத்தின் பிரகாரம் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். இதனால் அவர்களுடைய பெற்றோர்கள் பிள்ளைகள் குறித்து  அக்கறையுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--