2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

யாழில்.புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை நிலையம் திறப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். போதனா வைத்தியசாலையில் ஹற்றன் நஷினல் வங்கியின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை நிலையம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

யாழ்போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்தியர் என்.ஜெயக்குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹற்றன் நஷனல் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜேந்திரா தியாகராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்நிலையத்தை சம்பிரமதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் விருந்தினர்களா ஹற்றன் நஷினல் வங்கியின் பிரதிப் பொது முகாமையளர் எம்.பாய்வா, யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தனர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம,; சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் வைத்தியர் திருமதி யோகநாதன,; யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி பவானி, பசுபதிராஜா தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் மருத்துவ உத்தியோகஸ்தர் வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்

சுமார் 8 லட்சம் ரூபா நிதி உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் இது அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வெளிநாடுகளிலுள்ள புற்றுநோய் சம்பந்தமான நிபுணர்களுடன் ஸ்கைப் மூலம் கலந்துரையாட முடியும் என்பதோடு அவர்களின் ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .