Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
கடந்த முப்பது வருடகாலமாக வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இயங்கிய காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு, தற்போது மல்லாகம் நீதிமன்ற வீதியில் இயங்கத் தொடங்கியுள்ளது.
காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தை திறந்துவைக்கும் வைபவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி; சில்வா, சுன்னாகம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி வலி. வடக்குப் பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கமகே, வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன், காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் காமினி பெரெரா உள்ளிட்டோர் மங்கல விளக்கினை ஏற்றிவைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமார்களின் ஆசியுரைகள் நடைபெற்றன.
.jpg)
9 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Oct 2025