2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

போர் தளபாட கண்காட்சி

Super User   / 2012 நவம்பர் 08 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


வன்னி யுத்தத்தின் போது விடுதலை புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கனரக ஆயுதங்கள் மற்றும் கடற் கலங்கள் பொதுமக்களின் பார்வைக்காக புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுத தளபாடங்கள் மற்றும் கடற்கலங்கள் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக நாள்தோறும் பெருமளவான மக்கள் வந்தவண்ணமுள்ளனர்.

அத்துடன் இந்த ஆயுத கண்காட்சி  கூடத்திற்கு அருகில் உள்ள மந்துவில் குளத்தின் நடுவில் வன்னி இராணுவ வெற்றியைக் குறிக்கும் வகையில் போர் வெற்றி சின்னம் திற்நதுவைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வன்னிக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்மைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இந்த ஆயுத தளபாட கண்காட்சியை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .