2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் யாழ் விஜயம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதிக்கு யாழ்ப்பாணத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதி தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்டத்தில் உலக வங்கியின் அனுசரணையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள் எழுச்சி திட்ட கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.

இதன்போது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்டபட்ட சிறுப்பிட்டி ஜனசத்தி கிராமத்தில் வைத்து உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அத்துடன் உல வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை பார்வையிட்டதுடன் ஜனசத்தி மீள் எழுச்சி திட்ட கிராமத்தின் அபிவிருத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இதன்போது  பொருளாதரா அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரும் வருகை தந்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .