2021 ஜனவரி 27, புதன்கிழமை

தூண்டுதல் காரணமாகவே யாழ். பல்கலையில் தீபமேற்றப்பட்டது: டக்ளஸ்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 26 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

'தூண்டுதிலின் பேரிலேயே பல்கலைக்கழகத்தில் தீபமேற்றப்பட்டதென தவிர இறந்தவர்களை நினைவுகூர்ந்து அங்கு தீபமேற்றப்படவில்லை' என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இறந்தவர்களுக்கு தீபமேற்ற தடையில்லை. தடை விதிக்கவும் முடியாதெனன்றும் அவர் சுட்டிக்காட்டிய அமைச்சர், திட்டமிட்ட நோக்கத்துடன், குழப்பங்களை செய்துவிட்ட சிலர், நான்காயிரம் மாணவர்களின் கல்வியை குழப்பி விட்டார்கள் என்றும் கூறினார்.

சுதந்திரமாகவும், சமாதானமாகவும் நடமாடவும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் கூடிய இந்த காலத்தில், மாணவர்களின் கல்வியை தடைசெய்ய எண்ணுகின்றார்கள். இவ்வாறான வேலைகளுக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது என அவர் கூறினார்.

ஆரம்பத்தில் கை ஏந்த வைத்தவர்கள் இன்றுவரை கைஏந்த வைக்க நினைக்கின்றார்கள். ஆனால், இந்த காலம் மாறிவிட்டது. தவறான அர்த்தத்தினை வெளிப்படுத்தி, குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

என்னிடம் கூறியிருந்தால் இராணுவமாக இருந்தாலும் சரி, எவராக இருந்தாலும் சரி நான் அமைதி கிடைக்கும் வகையில் குழப்பத்தினை சுமூகமான நிலைக்கு கொண்டு வந்திருப்பேன்' அமைச்சர் மேலும் கூறினார்.

  Comments - 0

 • Kumar Wednesday, 26 December 2012 03:10 PM

  இது இவர்களுக்கு தேவையா ?

  Reply : 0       0

  செபஸ்டியன் Wednesday, 26 December 2012 10:40 PM

  என் கர்த்தரே கிடைக்குமா தமிழ் மக்களுக்கு 13வது திருத்த சட்டம்.

  Reply : 0       0

  Sumathy M Thursday, 27 December 2012 12:33 AM

  எமது இளைஞர்களை தூண்டி, ஆயுதம் தூக்க வைத்து எமது இனத்தை அளித்த கூட்டம் மீண்டும் தமது சொந்த அரசியல் லாபத்துக்காக இளைஞர்களை தூண்டி விடுகிறது. எமது இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...

  Reply : 0       0

  அஞ்சி Thursday, 27 December 2012 05:33 AM

  பல்கலைக்கழக மாணவர் என்ன மடையரா...?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .