2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மின் கம்பிகளை கடத்த முற்பட்ட இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான அலுமினிய மின்கம்பிகளை லொறியொன்றில் ஏற்றிச்செல்ல முற்பட்டதாகக் கூறப்படும் இருவரை யாழ். பொம்மைவெளி 9ஆம் குறுக்குத்தெருவில் ஞாயிற்றுக்கிழமை (30) கைதுசெய்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன்,  42 பைகளிலிருந்து 840 கிலோகிராம் அலுமினியக் மின்கம்பிகளை இவர்களிடமிருந்து கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

மின்கம்பிகள் கொழும்புக்கு கடத்திச் செல்வதாக இரகசியத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், அராலி தெற்கைச் சேர்ந்த லொறிச் சாரதியையும்  பொம்மைவெளி 4ஆம் குறுக்கைச் சேர்ந்த மற்றைய சந்தேக நபரையும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர்  கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .