2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

யாழில் ஷெல், கண்ணிவெடி மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, ற.றஜீவன்

யாழ்.மாவைக் கலட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றின் வளவுக்குள் இருந்து வெடிக்காத நிலையிலிருந்த ஆட்லெறி  ஷெல் ஒன்று நேற்று (06) மாலை மீட்கப்பட்டதாக காங்கேசன்துறைப் பொலிஸார் இன்று (07) தெரிவித்தனர்.

மாவைக்கலட்டிப் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தமையினால், மீள்குடியேறும் நோக்குடன் வீட்டு உரிமையாளர் தனது வளவினைத் துப்பரவு செய்யும் போது, நிலத்தில் வெடிக்காத நிலையில் புதையுண்டிருந்த ஷெல் ஒன்றினைக் கண்டுள்ளார்.

இதுதொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து இராணுவத்தினருடன் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் ஷெல்லினை மீட்டுச் சென்றனர்.

இதேவேளை, அச்சுவேலி இடைக்காடு அக்கரைப் பகுதியிலுள்ள மைதானமொன்றிலிருந்து கண்ணிவெடியொன்று நேற்று (06) மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் இன்று (07) தெரிவித்தனர்.

குறித்த மைதானத்தில் கண்ணிவெடி இருப்பதினை அவதானித்த பொதுமக்கள் தமக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு இராணுவத்தினருடன் சென்று கண்ணிவெடியை மீட்டதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .