2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் அமெரிக்கா கவனம்

George   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளது எனவும், அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி மிச்செல் எர்வின், மணல் அகழ்வு தொடர்பான தகவல்களை பெற்று சென்றதாகவும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் சகாதேவன், திங்கட்கிழமை(02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளால், தான்தோன்றித்தனமாக எந்த அனுமதியும் இல்லாமல் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அகழ்ந்தவர்கள் பெருமளவு இலாபம் பெற்றனர். எனினும் மண் அகழ்வுக்குள்ளான பிரதேசங்கள் மிக மோசமான முறையில் சூழல் அழிவை எதிர்நோக்கின.

நாகர்கோவில், மணற்காடு போன்ற இடங்களில் காணப்பட்ட பல நூற்றுக்கணக்கான மண் திட்டுக்கள் காணமற்போயுள்ளன தற்போதும் இந்நிலை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

அரசியல் செல்வாக்குமிக்கவர்களே தமது மக்களின் வளங்களை தாங்களே சூறையாடிவருகின்றனர். இங்கு நிலை கொண்டுள்ள இராணுவமும் எமது வளங்களை சூறையாடி வருகின்றது. தொண்டைமானாறு அக்கரையில் தனியார் காணிகளில் மணல் அகழ்வில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவை தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியிடம் எமது இயக்கம் தெரியப்படுத்தியது.

இனி வரும் காலங்களில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இது தொடர்பில் கவனம் செலுத்தும் எனவும் இவ்வாறான சட்டவிரோத மணல் அகழ்வுகள் இனியும் தொடர்ந்தால் தம்மிடம் தெரியப்படுத்துமாறும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .