2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தந்தையிடம் திருடிய மகனுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் தந்தையின் பணம் மற்றும் நகைகளை திருடிய மகனை எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கமாறு பருத்தித்துறை நீதவான் கணேசராசா மாணிக்கவாசகர் புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.

சந்தேகநபர் கடந்த ஜனவரி 20ஆம் திகதி தந்தையில் 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டரை பவுண் நகை ஆகியவற்றைத் திருடி தலைமறைவாகினார். இது தொடர்பில் தந்தை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

தந்தை கொழும்புக்கு சென்றிருந்தவேளை புதன்கிழமை (11) வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மகன் வீட்டிலிருந்த பொருட்களை திருட முற்பட்டவேளை, அயலவர்கள் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .