Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த்
தெற்கில் அமையவுள்ள புதிய அரசாங்கத்துடன் கூட்டிணைந்து செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
யாழ்;ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் நிலையத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்கள், மாவட்டத் தெரிவித்தாட்சி அலுவலகர் நாகலிங்கம் வேதநாயகனால் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை என்றாலும், மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள விசுவாசத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்பாட்டுடன் செயற்படுவார்கள்' என்றார்.
தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால், நிலையான அரசை அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? என ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 'அவ்வாறானதொரு முடிவை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும்' என்றார்.
அமைச்சுப் பதவிகள் ஏற்றுக்கொள்வீர்களா? எனக் கேட்டதற்கு பதிலளித்த மாவை, 'கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்கமாட்டார்கள். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், தேசிய அரசாங்கத்தின் அவையில் கடமையாற்றக்கூடியதாக இருக்கும். இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கான முன்மொழிவுகளைக் கொண்டுவரவேண்டும். தேசிய சபையாக நாடாளுமன்றம் கூடக்கூடிய நிலைமை இருக்கின்றது. தேசிய அவையில் ஆராய்ந்து தீர்மானம் மற்றும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இருக்கின்றோம்' என்று மேலும் கூறினார்.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago