Super User / 2011 நவம்பர் 25 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் இயற்கை அனர்தங்கள் தொடர்பாக எதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 24 மணி நேர தொலைபேசியான 0773957894 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் எஸ்.ரவி தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக யாழ். நாவாந்துறை, பொம்மவெளி, கரவெட்டி ராஜ கிராமம், மற்றும் ஜெ. - 84, ஜெ. - 85 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக இதே காலநிலை காணப்படுமாயின் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவித்த அவர, அனர்த்தங்கள் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, யாழ். மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை சீரான காற்று வீசுவதுடன் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு கிடைத்த காலநிலை பற்றிய அறிக்கையின் தரவுகள் தெரிவிப்பதாக யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது
யாழ். குடா கடல் நீரேரி பகுதியில் கடல் சற்று கொந்தளிப்பான நிலையில் இருக்கும் எனவும் அபத்தான நிலை ஏதும் இல்லை எனவும் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடலின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதால் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செய்வதற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .