2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

யாழில் போராட்டம்

Niroshini   / 2021 ஜனவரி 13 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி, கருத்து ஓவிய கண்காட்சி கவனயீர்ப்புப் போராட்டமொன்று, யாழ் நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை இக்கண்காட்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெற்கில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்று சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .