Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை யாழ் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் செல்லவுள்ள ஆணைக்குழு உறுப்பினர்கள் 11ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.45 மணி முதல் 12.45 மணி வரை குருநகர் கலாசார மண்டபத்திலும் பிற்பகல் 01.45 மணி முதல் 03.15 மணி வரை அரியாலை சரஸ்வதி சமூக நிலையத்திலும் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை நீர்வேலி கிராமிய அபிவிருத்தி நிலையத்திலும் சாட்சியமளிப்பவர்களை சந்திக்கவுள்ளனர்.
12ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை அளவெட்டி மஹஜனா சபையிலும் நண்பகல் 11.30 மணி முதல் 01.30 மணி வரை வட்டுக்கோட்டை கிழக்கு பெண்கள் அபிவிருத்தி நிலையத்திலும் பிற்பகல் 03.00 மணி முதல் 06.00 மணி வரை யாழ். மாவட்ட செயலகத்திலும் அவர்கள் மக்களை சந்திப்பர்.
13ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.15 மணி முதல் 12.00 மணி வரை குடாதனை தேவாலயத்திலும் பிற்பகல் 02.00 மணி முதல் 04.00 மணி வரை கரவெட்டி முருகன் கோயிலிலும் மாலை 04.30 மணி முதல் 06.30 மணி வரை சாவகச்சேரி கலாசார நிலையத்திலும் மக்களை சந்திக்கவுள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் யாழ் விஜயத்தின் இறுதி நாளான 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் பிற்பகல் 02.00 மணி முதல் 04.00 மணி வரை வேலனை மான்கும்பன் பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்திலும் மக்களை சந்தித்து சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.
8 minute ago
16 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
34 minute ago
49 minute ago