Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 02 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
'கடவுளின் குழந்தைகள்' அமைப்பின் சிறுவர்களுக்கான காப்பகம் நேற்று திங்கட்கிழமை அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது. போரினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலத் தொழில் வாய்ப்புகளினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த காப்பகத்தின் செயற்பாடுகள் இருக்கும் என்று திறப்பு விழாவின் போது குறித்த அமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, ' நாட்டில் யுத்தம் ஓய்ந்து விட்டாலும் அது ஏற்படுத்திய பல பாதிப்புகள் இன்னும் மறையவில்லை. அவற்றில் சிறுவர்கள் சார்ந்த பிரச்சினையும் ஒன்று. அத்தகைய பிரச்சினைகளை ஒழித்துஇ எமது சிறுவர்கள் வளமாக வாழ இந்தக் காப்பகம் துணை செய்யும்' என நிகழ்வில் கலந்து கொண்டு இ நாடா வெட்டிஇ காப்பகத்தை திறந்து வைத்த சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
நிகழ்வில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தஇ யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், கோப்பாய் உதவிப் பிரதேச செயலர் ச.பிரேமினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago