2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஜனாதிபதிக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

பிரித்தானியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் தற்போது ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது, யாழ். செயலகம் வரை ஊர்வலமாகச் செல்லவுள்ளது. பின்னர் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரிடம் மகஜரொன்று கையளிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
யாழ். மாவட்ட சுதந்திரக் கட்சி ஏற்பாட்டிலும் படையினரின் அழைப்பின் பேரிலும் இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பொது அமைப்புக்களும் பங்குபற்றுகின்றன.

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டப் பேரணியைத் தொடர்ந்து இன்று யாழ்ப்பாணத்தில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறுகிறது.


  Comments - 0

 • sab Tuesday, 07 December 2010 08:30 PM

  முல்லைத்தீவில்இ கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றி மக்களிடம் கேட்டீர்களா? செய்தி இரு பக்கமும் சமமாக இருக்க வேணும். அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக சொல்லி சிலர் அழைத்து சென்று ஆர்ப்பாட்டத்தில் இறக்கியமை பற்றி உங்களுக்கு தகவல் கிடைக்கவில்லையா? மக்களை கட்டாயப் படுத்தி செய்வது என்பது சரியானதா?

  Reply : 0       0

  ajan Tuesday, 07 December 2010 09:26 PM

  சரியாக சொன்னிங்க சப்
  மக்களை கட்டியபடுத்தி போராட்டத்தில் இறக்கியமை.
  ஒரு பக்கம் ஒரு கிலோ அரிசி தருவதாக சொல்லியும் அழைத்து சென்று இருக்கிறார்கள்.
  ஊடக தரம் என்று எதாவது இருக்க என்ன இவர்களுக்கு எல்லாம்.

  Reply : 0       0

  koneswaransaro Tuesday, 07 December 2010 10:13 PM

  பாம்பு தின்கின்ற ஊரில் வாழ்ந்தால் நடுத்துண்டு நமக்கு என்பது போலத்தான் இன்று வடபகுதி மக்களின் நிலை.அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். சொன்னதைச் செய்தால் தானே நாளை உயிர் வாழ முடியும்.

  Reply : 0       0

  Ilankai thamilan Wednesday, 08 December 2010 11:00 PM

  சரி. ஹீத்ரு விமான நிலையத்தில் ஆர்பாட்டம் செய்யும் போது, இலங்கையில் உள்ள தமிழர் பற்றி சிந்தித்து பார்த்தீர்களா? இலங்கையிலுள்ள உண்மையிலேயே கஷ்டப்பட்ட வன்னி மக்களுக்கு ஏதேனும் உதவினால் தேவையில்லை..

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X