2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

சேத்தாங்குளம் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்வு

Super User   / 2011 மார்ச் 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சேத்தாங்குளம் சந்தி முதல் மாதகல் துறை வரையிலான கடலோரப் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்துவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உடன் நடவடிக்கை எடுத்துள்ளார் என அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வலித்தூண்டல் இறங்குதுறைப் பகுதியில் கடற்றொழிலாளர்கள் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான பகுதியையும் விஸ்தரிக்க அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளாதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று நேற்றை வியாழக்கிழமை சேத்தாங்குளம், இளவாலை, வலித்தூண்டல் ஆகிய பகுதிகளுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அப்பகுதிகளை ஆராய்ந்ததுடன் பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இதன் பிரகாரம் அப்பகுதிகளைச் சார்ந்த மக்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க யாழ் கடற்படை கட்டளை அதிகாரியுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைவாக எதிர்வரும் திங்கட்கிழமை 7ஆம் திகதி முதல் சேத்தாங்குளம் சந்தியிலிருந்து மாதகல் துறை வரையிலான கடலோரப் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

அப்பகுதி சார்ந்த ஏனைய இடங்களில் தற்போது மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதால் கூடிய விரைவில் அவ்விடங்களிலும் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X