2021 மே 08, சனிக்கிழமை

விபத்தில் காயமடைந்த அஸாருதீனின் மகன் உயிரிழந்தார்

Super User   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அஸாருதீனின் மகன் அயாஸுதீன் இன்று உயிரிழந்தார்.

19 வயதான அயாஸுதீன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதாராபாத்தில் அதிவேகமாக ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி வீழ்ந்ததால் அஸாருதீனின் மகன் அயாஸுதீனும்  அஸாருதீனின் சகோதரியின் மகனான அஜ்மல் உர் ரஹ்மானும் படுகாயமடைந்தனர். 16 வயதான அஜ்மல் உல் ரஹ்மான் அன்றைய தினமே உயிரிழந்தார்.

அயாஸுதீன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

மொஹமட் அஸாருதீனுக்கும் அவரின் முதல் மனைவியான நௌரீனுக்கும் பிறந்த இரண்டாவது புதல்வர் அயாஸுதீன் ஆவார்.

மொஹமட் அஸாருதீனுக்கும் அவரின் முதல் மனைவியான நௌரீனுக்கும் பிறந்த இரண்டாவது புதல்வர் அயாஸுதீன் ஆவார். 

1996 ஆம் ஆண்டு முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும் நடிகையுமான சங்கீதா பிஜ்லனியை அஸாருதீன் திருமணம் செய்தார்.   கடந்த வருடம் இத்தம்பதி விவாகரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் தொகுதியொன்றில்   காங்கிரஸ்கட்சி சார்பில் போட்டியிட்டு அஸாருதீன் வெற்றி பெற்றார்.
 


  Comments - 0

 • ajmal from thambala Friday, 16 September 2011 08:09 PM

  allahh iwarai porunthi kkolwnaha.............

  Reply : 0       0

  Mohamed Friday, 16 September 2011 08:28 PM

  innalillaahi va innaa ilaihi rajiuoon.

  Reply : 0       0

  xlntgson Saturday, 17 September 2011 09:09 PM

  மோட்டார் பைக் ஓட்ட பிள்ளைகளுக்கு ஆசை, வாங்கிக்கொடுக்காத பெற்றோர் மீது கோபம். ஆனால் இப்பிள்ளை இறப்புக்கு நீதிமன்று பெற்றோரைத் தான் குறை கூறுகிறது, கவனிக்க!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X