2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

இசையோடு தூங்கலாம் வாருங்கள்…

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரவில் நித்திரைக்கு செல்லும்போது இனிமையான பாடல்களை கேட்பது சிலரது வழமை. இசை கேட்காவிட்டால் சிலருக்கு தூக்கமே வராது. சிறு குழந்தைகளுக்கு கூட தாலாட்டு கேட்டால்தான் தூக்கம் வரும்.

இப்படியான இசை பிரியர்களை கருத்திற்கொண்டு இசைபாடும் தலையணையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த தலையணை மிகவும் மெருதுவானது. அதன் ஓரத்தில் சிறிய பாடல் ஒலிப்பதிவு கருவியை பொருத்தும் வசதி இருக்கிறது. நீங்கள் விரும்புகின்ற பாடல்களை இதில் பொருத்தி கேட்க முடியும். விரும்பும் இசையினை கேட்டவாறே இனிமையான உறக்கத்தினை உங்களால் அனுபவிக்க முடியும் என்கின்றனர் கண்டுபிடிப்பாளர்கள்.

30 தொடக்கம் 60 நிமிடங்கள்வரை இசை ஒலிக்குமாறு உங்களால் நேரக்கட்டுப்பாடினை விதிக்க முடியும். ஆகையினால் நீங்கள் உறங்கிய பின்னர் தானாகவே இக்கருவி ஒலிப்பது நின்றுவிடும். எனவே உங்களின் நிம்மதியான நித்திரை தொந்தரவில்லாமல் தொடரும். இக்கருவியில் பாடல்கள் மட்டுமல்லாமல் வித்தியாசமான ஒலிகளும் புகுத்தப்பட்டிருக்கின்றன. குருவிகளின் சத்தம், அலையின் ஓசை, அருவிகளின் சலசலப்பு என பலவிதமான ஒலிகளும் இதில் பதிவு செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இதில் ஏதாவது ஓர் ஒலியினை தெரிவுசெய்து இத்தலையணையில் தூங்கினால் அந்தந்த சூழலில் உறங்குவதுபோல் உங்களுக்கு உணர்வு ஏற்படும் என்பது மேலும் சிறப்பானதாகும்.

Sleep Tunes Music Pillow from Sharper Image Online on Vimeo.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--