2021 மே 12, புதன்கிழமை

தமிழ் மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறையை தீர்த்து வைக்க கோரிக்கை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம் மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக தீர்த்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

வடமேல் மாகாண புத்தளம் மாவட்டத்தின் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை  நீண்ட கால குறைபாடாக காணப்பட்டு வருகின்றது. புதிதாக நியமனம் பெற்று வரும் குருநாகல் மாவட்ட தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் குறுகிய காலத்துக்குள்  தமது ஊர்களுக்கு மாற்றமாகி சென்று விடுகின்றனர்.

கடந்த கால ஆட்சியில் தமிழ் மொழி மூலம் உரிய முறையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமையும் இதற்கு மற்றுமொரு காரணமாகும். க.பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தி எய்தியவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமிடத்து புத்தளம் மாவட்டத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என கருதுகிறோம். 

தற்போதைய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்தவர். சரியான இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாகாண கல்வி அமைச்சருடன் அவர் இணைந்து இதனை நிவர்த்திக்க முன் வரவேண்டும். நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு -  செலவுத்திட்டத்தில் இதற்கான நிதி  ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம் தீர்வை காண முடியும்.

இதற்கு மாறாக கல்வி காரியாலங்களுக்கு முன்பாகவோ அல்லது மாகாண காரியாலங்களுக்கு முன்பாகவோ ஆர்ப்பாட்டங்கள் செய்வதன் மூலமாகவோ, கல்வி அதிகாரிகளை ஏசுவதன் மூலமாகவோ இதற்கு தீர்வினை காண முடியாது.

இந்த நல்ல சந்தர்ப்பத்தில் தீர்வு காணாவிட்டால் மாகாண மற்றும் மத்திய கல்வி அமைச்சர்கள் இதற்கு வகை சொல்லியாகவேண்டும். தவறுமிடத்து மாகாண போராட்டங்களை நாம் ஆரம்பிக்க நேரிடும் எனக்கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .