2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ், மும்தாஜ்))

விற்பனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் யானை தந்த முத்துக்கள் (கஜ முத்துக்கள்) சிலவற்றை முந்தல் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

நேற்று மாலை முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவால சந்தியில் வைத்து  யானை தந்த முத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

7 கிரேம் நிறையுடைய  2 யானை தந்த முத்துக்களும் 4 கிரேம் நிறையுடைய ஒரு  யானை தந்த முத்துமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் அவற்றை எடுத்துச் சென்றதான சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Pix by:- Hiran Priyankara Jayasinghe


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--