Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 13 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
இம்முறை பொசன் பௌர்ணமி கொண்டாட்டங்களுக்காக 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பிரதேசங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸாருடன் சிவில் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடும் வீரர்கள் தங்குவதற்காக நகரைச் சூழவுள்ள 17 பாடசாலைகள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.
அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலைப் பகுதிகளுக்கு வரும் பக்தர்கள் குளிக்கும் குளங்களில் மீட்புப் பணிகளுக்கென 100 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக
மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சூலசிரி தெரிவித்தார்.
மீட்புப் படையினர் அபயபாவி, நாச்சியாதீவு வாவி, விலச்சிய வாவி உள்ளிட்ட குளங்களை அண்மித்த பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் இக்குளங்களில் குளிப்பவர்கள் அவதானமாகச் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை சனநெரிசல் காரணமாக சிறு காயங்களுக்குட்படுபவர்களுக்கும் திடீர் நோய்களுக்குட்படுபவர்களுக்கும் முதலுதவிச் சிகிச்சையினை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
9 hours ago