2021 மே 12, புதன்கிழமை

கடை தீப்பற்றயதால் ஒருகோடி ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம் கடை ஐம்பது பகுதியில் மின் உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருகோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய பொருட்கள்  சேதமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கின் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பொலிஸார், தீயணைப்புப்படை வீரர்கள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்ட போதும் இருமாடிகளிலும் வைக்கப்பட்டிருந்த பெருமளவு மின் உபகரணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .