2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

காவல் நிலையத்தில் கைதி தற்கொலை

Kogilavani   / 2011 நவம்பர் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)
பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நேற்று செவ்வாய்கிழமை பிங்கிரிய பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டிருந்தார்.

பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான இவர், பொலிஸ் நிலைய சிறைகூடத்தில் தான் அணிந்திருந்த சாரத்தினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக குளியாப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X