2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

விபத்தில் பெண்கள் இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தனியார் பஸ் வண்டியொன்று மோதியதில் பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.

சிலாபம், முன்னேஸ்வரம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் வண்டியொன்றிலிருந்து இவர்கள் இருவரும் வீதியைக் கடப்பதற்கு  முற்பட்டபோது, வீதியில் வந்துகொண்டிருந்த பிறிதொரு  பஸ் வண்டி இவர்கள் இருவர் மீதும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம், மைக்குளம் அலம்ப பிரதேசத்தைச் சேர்ந்த மேரி மாலனி கமலானி பெரேரா (வயது 60), முன்னேஸ்வரம் ஐயனார் கோவில் வீதியைச் சேர்ந்த   லீலா ஹேரத் வனிகசுந்தரி (வயது 50) ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். மற்றையவர்  சிலாபம் லைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  பஸ் வண்டிச் சாரதியை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இவ்விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .