2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

டிப்பர் மோதி பாடசாலை மாணவன் பலி

Super User   / 2014 ஜூலை 03 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

கொட்டதெனியாவ, தியகம் பொல, நவான பிரதேசத்தில் குறுக்கு வீதியொன்றில் நேற்று டிப்பர் வண்டி மோதி 15 வயது பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டதெனியாவ கருணாரத்ன மத்திய மகாவித்தியாலயத்தில் 10 தரத்தில் கல்வி பயிலும் அதேபிரதேசத்தைச் சேர்ந்த கஜநாயக்க கங்கானம்லாகே  தில்சான் உதயங்க என்ற மாணவனே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

நேற்று  பிற்பகல் பாடசாலை முடிவடைந்து  துவிச்சகர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது டிப்பர் வண்டியின் நடுப்பகுதியில் மோதி  இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மாணவனின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்  பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் விபத்தது சம்பவத்தை அடுத்து டிப்பர் சாரதியான தியகம் பொல, நாவான பிரதேசத்தை சேர்ந்த சார்ளஸ் பெரனாந்து (35 வயது) என்பவரை கைது செய்யதுள்ளதாகவும் சந்தேக நபரை இன்று மினுவாங்கொட நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .