2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நீர்கொழும்பில் இலங்கை வங்கி ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

Editorial   / 2020 மார்ச் 06 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கியின் பொதுமுகாமையாளரை, அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியமையைக் கண்டித்தும் முறையற்ற வகையில் பொதுமுகாமையாளர் ஒருவரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலங்கை வங்கி ஊழியர்கள்,  நாடாளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை,  அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

அதற்கு ஆதரவுத் தெரிவிக்கும் முகமாக கம்பஹா மாவட்டத்திலுள்ள இலங்கை வங்கிகளிலும் குறிப்பாக நீர்கொழும்பில் உள்ள இரண்டு இலங்கை வங்கி கிளைகளிலும் பணியாற்றும் ஊழியர்களும், இன்றயதினம் கடமைக்குச் சமூகமளிக்கவில்லை.

இதனால் பொதுமக்கள், வர்த்தகர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .