Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூலை மாதத்தில் ஒரு வெற்றிகரமான வெஸ்டர்ன் யூனியன் ஊக்குவிப்பு நிகழ்ச்சியை நடத்திய அமானா வங்கி செப்டம்பர் மாதத்திலும் தனது அனைத்து வெஸ்டர்ன் யூனியன் கொடுக்கல்வாங்கல் நுகர்வோருக்கு ஒரு விசேட வெகுமதியை வழங்கும் ஊக்குவிப்பு நிகழ்ச்சியை இலங்கையில் வெஸ்டர்ன் யூனியனுக்கான பிரதான முகவராக திகழும் வரையறுக்கப்பட்ட எம்.எம்.பீ.எல் மணி ட்ரான்ஸ்பர் தனியார் கம்பனியுடன் சேர்ந்து ஆரம்பித்துள்ளது.
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து தொழில்புரிவோரும், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இலங்கையில் உள்ள தமது அன்புக்குரியவர்களுக்கு தமது பணத்தை அனுப்புவதற்காக பல்வேறு முகவர் நிலையங்கள் ஊடாக வெஸ்டர்ன் யூனியன் சேவையை பெற்றுக்கொள்ளலாம். நாடு முழுவதிலும் மூலோபாய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அமானா வங்கிக் கிளைகளில் இந்த சேவையை பயன்படுத்துவதுடன் பரிசினையும் பெற்றுக்கொள்ளலாம்.
தெரிவுசெய்யப்பட்ட கிளைகள் ஊடாக வழங்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட வங்கி நேரம் மற்றும் சனிக்கிழமை வங்கிச் சேவை மூலமாகவும் வெஸ்டர்ன் யூனியன் பணப்பரிமாற்று சேவையை சௌகரியமான முறையில் பெற்றுக்கொள்ளலாம். இந்த விசேட வெஸ்டர்ன் யூனியன் பரிசுத்திட்டம் 2015 செப்டம்பர் மாதத்தில் அல்லது இருப்புக்கள் நிறைவுபெறும் வரை அமுல்படுத்தப்படும். அமானா வங்கியின் மிக வேகமாக வளர்ந்துவரும் கிளை வலையமைப்பில் கொழும்பு 3 இல் அமைந்துள்ள பிரதான கிளை மற்றும் மகளிர் கிளை, புறக்கோட்டை, தெஹிவளை, அக்கரைப்பற்று, அக்குறணை, பதுளை, காலி, கம்பளை, ஏராவூர், கதுருவெல, கல்முனை, கண்டி, காத்தான்குடி, கிண்ணியா, குளியாப்பிட்டி, குருணாகல், மாவனெல்ல, நீர்கொழும்பு, நிந்தவூர், ஓட்டமாவடி, புத்தளம், இரத்தினபுரி மற்றும் சம்மாந்துறை கிளைகள் உள்ளடங்குகின்றன.
வட்டியுடன் சம்பந்தப்படாத இஸ்லாமிய வங்கி துறையுடன் முற்றிலும் இணங்கி செயற்பட்டு வரும் இலங்கையின் ஒரேயொரு உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியாகத் திகழும் அமானா வங்கி கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒரு நிலையான போக்குடன் தேசிய நீண்டகால தரவரிசையில் (பீ.பீ. எல்.கே) அமானா வங்கி பிட்ச் ரேட்டிங் வரிசையில் அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் அமெரிக்காவின் வொஷpங்டன் நகரில் நடைபெற்ற 18ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகளைத் தெரிவு செய்யும் விருது விழாவில் குலோபல் பைனான்ஸ் சஞ்சிகையினால் உலகில் முன்னேறி வரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக இந்த வங்கி அங்கீகரிக்கப்பட்டது. தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி மற்றும் பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.
20 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago