2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி 2020ஐ உறுதியாக ஆரம்பம்

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, ஆறு புதிய கிளைகளைத் திறந்து, இதுவரை பதிவாகிய உச்ச விற்பனைப் பெறுமதியைப் பதிவு செய்து, ஆண்டைச் சிறப்பான வகையில் ஆரம்பித்துள்ளது.  

இரண்டு மாதங்களில் மாத்திரம், நிறுவனம் மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை, ஹங்வெல்ல, பத்தேகம, எம்பிலிபிட்டிய ஆகிய பகுதிகளில் தனது கிளைகளைத் திறந்துள்ளது. ஜனவரி மாதத்தில் நிறுவனம் இதுவரை காலத்தில் பதிவு செய்திருந்த மிகவும் உயர்ந்த விற்பனைப் பெறுமதியை பதிவு செய்திருந்ததுடன், கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் புதிய வியாபார வளர்ச்சியில் 100சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது.

குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. சேன ஹத்தெஹிகேயின்  தூர நோக்குடைய வழிகாட்டலின் கீழ், 2011 ஆம் ஆண்டில் காப்புறுதித் துறையில் ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி பிரவேசித்திருந்தது. நாட்டின் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி வர்த்தக நாமமாகத் திகழ்வதை நோக்கி ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி தூர நோக்கம் கொண்ட செயற்றிட்டத்துக்கமைய செயலாற்றி வருகின்றது. இலங்கைக் காப்புறுதி சபையின் அங்கிகாரம் பெற்ற நிறுவனமாக அமைந்துள்ளதுடன், ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநராகச் செயலாற்றுகின்றது. தனது செயற்பாடுகளை ஆரம்பித்த முதல் வருடத்தில் 100 மில்லியன் ரூபாயை மொத்த செலுத்தப்பட்ட தவணைக் கட்டணமாகப் பதிவு செய்திருந்தது.

நிறுவனம் தொடர்ச்சியாகத தனது இலாகாவை மேம்படுத்தி வருவதுடன், தற்போது காப்புறுதி, தவணைக் காப்புறுதி, கல்வி, முதலீடு, ஓய்வூதியக் கொடுப்பனவு, குழு காப்புறுதி, கடன் காப்புறுதி, நிவாரணக் காப்புறுதி போன்ற சேவைகளை வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .