Gavitha / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
Würth ஆசிய பசுபிக் மூலோபாய சபையின் வருடாந்த பிராந்தியப் பணிப்பாளர் சபைக் கூட்டமானது, Würth Lanka நிறுவனத்தின் அழைப்பின் பேரில் 2016 அண்மையில் இலங்கையில் நடைபெற்றது. வாகனங்களின் விற்பனைக்குப் பின்னரான சந்தைத் தொடர்பில் இலங்கையில் காணப்படுகின்ற வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்காண்பிப்பதற்கு ஒர் உகந்த வாய்ப்பாக இந்த முக்கியமான நிகழ்வு அமைந்துள்ளது.
உள்நாட்டுத் துணை நிறுவனமான Würth Lanka தனது சிரேஷ்ட பிராந்திய முகாமைத்துவ அணியின் முன்னிலையில் தனது சாதனைகளைக் காண்பிப்பதற்கு இந்த வாய்ப்பைச் சிறந்த முறையில் உபயோகித்துள்ளதுடன், தொழிற்றுறை சேர்ந்தவர்கள் மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு குழுவினருக்கு, தொழிற்றுறையின் எதிர்காலம் தொடர்பில் வட்ட மேசை கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு, Würth ஆசிய பசுபிக் பணிப்பாளர் சபையினரை சந்திப்பதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு முகவராண்மை வலையமைப்பின் தலைமை அதிகாரிகளுடனான இந்த கலந்துரையாடல், Würth Lanka நிறுவனத்தின் வெற்றிகரமான தொழிற்பாடுகளின் தர ஒப்பீட்டை மேலும் அதிகரிப்பதற்கு உதவுவதுடன், திறன்மிக்க ஜேர்மன் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட வியட்னாம், கம்போடியா, பங்களாதேஷ் போன்ற, பிராந்தியத்திலுள்ள வளர்ச்சிகண்டுவருகின்ற சந்தைகளின் கட்டமைப்பை இலங்கையிலும் அறிமுகப்படுத்த வழிவகுக்கும்.
மோட்டார் வாகனம் மற்றும் நிர்மாணத் தொழிற்துறையில் விற்பனைக்குப் பின்னரான சந்தை உற்பத்திகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் Würth Lanka நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
3 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
02 Nov 2025
02 Nov 2025