Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
Blink இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட், இலங்கையில் தனது ஐந்து வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்றது.
இலங்கையில் கடிகாரங்கள் விநியோகத்தராக Blink இன்டர்நஷனல் 2014 நவம்பர் மாதம் நிறுவப்பட்டிருந்தது. நாட்டின் கைக்கடிகார சேகரிப்பாளர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் நோக்குடன் நிறுவப்பட்ட இந்நிறுவனம், நாடு முழுவதிலும் காணப்படும் விற்பனையாளர்களை நிர்வகித்த வண்ணமுள்ளது.
Avarna Ventures பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்குவதுடன், இலங்கையில் SEVENFRIDAY, PUMA கைக்கடிகாரங்களின் பிரத்தியேக விநியோகத்தர்களாக இயங்குவதற்கான உடன்படிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது முதல் ஆண்டில், Cool Planet பிரைவட் லிமிடெட் நிறுவனத்துடன் தனது முதலாவது விற்பனை உடன்படிக்கையையும் கைச்சாத்திட்டிருந்தது. இதனூடாக, நாடு முழுவதிலும் Blink இன்டர்நஷனல் கைக்கடிகாரங்களை விற்பனை செய்வதற்கான முதலாவது மீள் விற்பனையாளராக Cool Planet ஐ நிறுவியிருந்தது.
ஒரு வருடம் கடந்த நிலையில், 2015 டிசெம்பர் மாதத்தில், நிறுவனம் வர்த்தக நாமத்தின் வெற்றிகரமான செயற்பாட்டை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கைக்கடிகார நிறுவனமான Casio (ஜப்பான்) உடன் Blink இன்டர்நஷனல் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது.
இதனூடாக, இலங்கையில் Casio கைக்கடிகாரங்களுக்கான உத்தியோகபூர்வமான ஏக விநியோகத்தராக Blink இன்டர்நஷனல் நிறுவப்பட்டிருந்தது.
Blink இன்டர்நஷனல் தரம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றுக்காக ஒப்பற்ற நிலையை எய்தியுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற நாமங்களான Esprit, Cross ஆகியவற்றுடன் கைகோர்த்துள்ளதுடன், நாடு முழுவதிலும் 160 க்கும் அதிகமான விநியோகத்தர்களுடன் கைகோர்த்துள்ளது.
இதில், Odel, Cool Planet, Starline (காலி), Eiffel (அனுராதபுரம்) மற்றும் Kings (யாழ்ப்பாணம்) போன்றன சிலவாகும்.
27 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago