2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

செலான் வங்கியின் ‘தியுனுவட சவியக்’

Editorial   / 2020 மார்ச் 10 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, அறிவு பகிர்வு மற்றும் மாற்றியமைப்பு தொடர்பில் தனது ஆர்வத்தின் வெளியீடாக, ஏற்றுமதி துறையைச் சேர்ந்த சிறு, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கான ‘தியுனுவட்ட சவியக்’ அறிவு பகிர்வு பயிற்சிப் பட்டறையொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சி கட்டுநாயக்க, ஃபுல் மூன் கார்டன் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. 

இலங்கையின் சிறு, நடுத்தரளவு துறையினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமான பங்களிப்பு வழங்கப்படுகின்றது. புத்தாக்கமான சிந்தனைகளை மேம்படுத்தி, தொழில்முயற்சி யாண்மையி ல் ஆர்வமுள்ள  பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. 

செலான் வங்கியின் அதிகாரிகள் பங்கே ற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் வியாபார சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் துறையின் முன்னோடிகள் ஆகியோரும் கலந்து கொண்டு, சிறு, நடுத்தரளவு தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், எதிர்காலத்தில் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் செலான் வங்கியினூடாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதி உதவிகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.  

தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற வங்கி அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் செயலாற்றும் செலான் வங்கி, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துரிதமாக வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளதுடன், புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் சேவைகளை வங்கியியல் துறையில் வழங்குகின்றது. நாடு முழுவதிலும் 172 கிளைகளை வங்கி கொண்டுள்ளதுடன், நாட்டின் முக்கியமான பகுதிகளை உள்வாங்கி 215 ATM அலகுகளையும் கொண்டுள்ளது. 10 கிளைகளினூடாக 365 நாள் சேவை வழங்கப்படுகின்றது. செலான் வங்கி தன்வசம் வளர்ந்து வரும் சிறு, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள், சில்லறை மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .