2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்ரீ லங்கா பெண்களின் குரல்களுக்கு வலுவூட்டல்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்தி ஆகியவற்றின் பிணைப்பை வெளிப்படுத்தும் வகையிலும், பெண்களின் குரலுக்கு வலுவூட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தியும் புத்தாக்கமான சமூக அபிவிருத்தி மய்யத்துடன் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்ரீ லங்கா இணைந்து ‘Transforming communities: Voices and Choices of Women and Girls’ எனும் பிரசுரத்தை வெளியிட்டுள்ளது. 

புத்தாக்கமான சமூக அபிவிருத்தி மய்யத்தின் சமிதா சுகதிமாலாவால் ‘Transforming communities: Voices and Choices of Women and Girls’ எனும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டத்தின் அடிப்படையில் இந்தப் பிரசுரம் அமைந்துள்ளது. தமது சமூக அங்கத்தவர்களுடன் தலைவர்களாகப் பெண்கள், மகளிருக்குத் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். 

அநுராதபுரம், மொனராகலை,  ஹம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 200 பெண்கள், 100 இளம் பெண்களைத் தலைமைத்துவ நிலைகளில் கட்டியெழுப்பும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. தெரிவு செய்யப்பட்ட நபர்கள், தமது சமூகத்தின் நலனில் பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், பெண்கள்,  இளம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உறுதியான குரலையும் சிறந்த வாழ்க்கை வாய்ப்புகளைக் கொண்டிருக்கவும் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.  

இப்பிரசுரத்தால் சுமார் 60 சமூக அடிப்படையிலான பெண்கள் மற்றும் இளம் பெண்களின் தலைமைத்துவ கோவைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், இவர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதனூடாக அவர்களின் கதைகள் வெளிக்கொணரப்பட்டிருந்ததுடன், சமூகத்திலுள்ள ஏனைய பெண்களுக்கும் இளம் பெண்களுக்கும் முன்மாதிரியாக அமைந்திருந்ததுடன், அவர்களையும் ஊக்குவித்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X