Super User / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ட்ஸ் ஏஜ் மிரக்கள் தயாரிப்புகளின் மூலம் கடந்த இரு வருடங்களில் உங்கள் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பகிர்ந்து, பரிசில்களை வெல்ல முடியுமென பொன்ட்ஸ் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வருட காலம் பொன்ட்ஸ் ஏஜ் மிரக்கள் தயாரிப்புகளை உபயோகிக்கும் பாவனையாளர்களுக்கு தமது உபகரணங்களை தெரிவிக்கும் முகமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமது குறிப்புகளை எழுதும் போது 250 சொற்களுக்கு மேற்படாமல் பொன்ட்ஸ் ஏஜ் மிரக்கள் பாவனையின் பின்னர் தமக்கு கிட்டிய சுவாரஸ்யமான அனுபவத்தையும் குறிப்பிட்டு அனுப்பும் படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி குறிப்பானது இல. 30/7,
திம்பிரிகஸ்யாய பிளேஸ், கொழும்பு 05 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் pழனௌஅசையஉடநளூபஅயடை.உழஅ எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான இறுதி திகதி ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதியாகும்
சிறந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் அதிர்ஷ்டசாலிகளில் முதலாமிடத்துக்கு தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு பெந்தோட்ட பீச் ஹோட்டலில் ஒரு நாள் பொழுதை உல்லாசமாக கழிப்பதற்கான அன்பளிப்பு வெளவுச்சர் வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் இடத்துக்கு தெரிவு செய்யப்படும் அதிர்ஷ்டசாலிக்கு கண்டி சாயா சிட்டாடெல் ஹோட்டலில் ஒரு நாள் பொழுதை உல்லாசமாக கழிப்பதற்கான அன்பளிப்பு வெளவுச்சர் வழங்கப்படவுள்ளது.
மூன்றாவது அதிர்ஷ்டசாலிக்கு நீர்கொழும்பு பிரவுண்ஸ் பீச் ஹோட்டலில் ஒரு நாள் பொழுதை உல்லாசமாக கழிப்பதற்கான அன்பளிப்பு வெளவுச்சர் வழங்கப்படவுள்ளது.
"பொன்டஸ் ஏஜ் மிரக்கள் தயாரிப்புகள் பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களின் சருமத்தை மிருதுவாகவும் இளமைத்தோற்றத்துடனும் திகழ்ச்செய்யும் நோக்குடனேயே அறிமுகப்படுத்தப்பட்டது. எமது வாடிக்கையாளர்களுடன் நாம் மேற்கொண்ட தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் மூலமாகவே நாம் இந்த போட்டி நிகழ்வை ஏற்பாடு செய்ய தீர்மானித்தோம்" என யுனிலீவர் நிறுவனத்தின் தர முகாமையாளர் சன்ட்ரின் புல்ஜென்ஸ் தெரிவித்தார்.
பொன்ட்ஸ் ஏஜ் மிரக்கள் சருமங்களிலுள்ள சுருக்கங்களையும். கடினமான கோடுகளையும் ஏழு நாட்களில் மறையச் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. பொன்ட்ஸ் ஏஜ் மிராக்கள் தயாரிப்புகள் பெண்களின் தோற்றத்தை அழகாகவும் இளமையாகவும் பேணுவது மட்டுமல்லாது, பெண்களின் வயதை வெளிக்காட்டாத வகையில் அமைந்துள்ளது.
3 minute ago
4 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 minute ago
25 minute ago
42 minute ago