Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தேசிய துறைசார் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாதனையாளர் விருதுகள் 2010யில் சி.பி.எல் நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமமான மஞ்சி, “மிகப்பெரிய” பிரிவில் துறைசார் நிபுணத்துவம் மற்றும் சேவை வல்லமைக்கான தங்க விருதை வென்றுள்ளது.
இந்நிகழ்வில் துறைசார் “மிகப்பெரிய” பிரிவில் வெள்ளி விருதை சி.பி.எல். நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான 'கன்வீனியன்ஸ் புட்ஸ் லங்கா' வென்றுள்ளது.
உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் சி.பி.எல் தயாரிப்புக்களுக்கு நிலவும் கேள்வி மற்றும் நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரம் போன்றன இந்த விருதுகளின் மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த விருதுகள் தமது நிறுவனத்துக்கு கிடைத்தமை குறித்து சி.பி.எல் நிறுவனத்தின் பணிப்பாளரும், விற்பனை பிரிவின் தலைவருமான நந்தன விக்ரமகே கருத்துத் தெரிவிக்கையில், "தொடர்ச்சியாக நாம் சந்தையில் அறிமுகப்படுத்தி வரும் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பிரபல்யமடைந்து, அதற்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரிக்கின்றமையே இந்த விருது எமக்கு கிடைத்ததற்கு காரணமாகும்.
எமது அனைத்து தயாரிப்புகளையும் சந்தையில் அறிமுகம் செய்வதற்கு முன்னர் பல தடவை பரிசோதனை செய்து தரத்தை உறுதி செய்கின்றோம். எமது நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த ஊழியர்களின் ஒருங்கிணைந்த ஒற்றுமையான செயற்பாட்டின் மூலமாகவே எமக்கு இந்த விருதுகள் கிடைத்தன" என்றார்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை தேசிய துறைசார் சம்மேளனத்தினால் இந்த விருது வழங்கும் நிகழ்வு 9ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விருதுகள் 5 பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்தது. சி.பி.எல் நிறுவனத்துக்கான தங்க விருதை இலங்கை தேசிய துறைசார் சம்மேளனத்தின் பிரதிநிதி நிஹால் அபேசேகரவிடமிருந்து சி.பி.எல் நிறுவனத்தின் தலைவர் ரம்ய விக்ரமசிங்க பெற்றுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
6 hours ago
8 hours ago