2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி வங்கிகள் திறப்பு

Kogilavani   / 2013 ஜூலை 20 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்


முல்லைத்தீவு கறைத்துறைப்பற்று பிரதேச செயலக மஹா சங்கத்தின் கீழ் இரண்டு சமுர்த்தி வங்கிகள் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

நீண்ட காலத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் சமுர்த்தி வங்கி, மஹா சங்கம், மாவட்ட செயலகம் என்பவற்றுடன் வெளிக்கள உத்தியோகத்தர்களாகவும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான உள்ளக மற்றும் வெளிக்களப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் முல்லைத்தீவு கறைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திற்குற்பட்ட முள்ளியவளை, சிலாவத்தை ஆகிய பிரதேசங்களில் சமுர்த்தி வங்கிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X