2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

உங்கள் மகளுக்கு பொருத்தமான முதல் பிரா வகை

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்பிள்ளை ஒருவருக்கு முதல்முறையாக பிரா ஒன்றை ஷொப்பிங் செய்வது என்பது மிக முக்கிய தருணமாக உள்ளதுடன், ஒரு பெண் தனது குழந்தைப் பருவத்திலிருந்து பெண்மை பருவத்தை எய்துவதை இது குறிக்கிறது. இருப்பினும், உங்கள் மகளுக்கு பிரா ஒன்றினை வாங்குவதற்கு ஏற்ற சரியான நேரத்தை அறிவது மிகவும் கடினமாகும். ஓர் தாயாக உங்கள் சின்ன மகளுக்கு அவளது முதலாவது பிராவினை வாங்கும் போது நீங்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், அதேசமயம் ஆயத்தமற்ற தன்மையையும் உணர்வீர்கள். ஆனால் ஒருசில கடைகளில் அசௌகரியமானதும், வயதுக்கு பொருத்தமற்றதுமான தெரிவுகளே காணப்படுகின்றன. 1886ஆம் ஆண்டு தொடக்கம் உள்ளாடைத் தெரிவுகளை தயாரித்து வரும் டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனமானது உங்கள் மகளுக்கு பிரா ஒன்றை வாங்குவதற்கான சரியான நேரம் தொடர்பில் நிபுணர்களின் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

beginner bra ஒன்றை வாங்குவதற்கு பொருத்தமான நேரம்:
ஒரு இளம் பெண்ணிற்கு தனது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தன் தாயுடன் மிகவும் சௌகரியமான முறையில் பேசக்கூடியதாக இருத்தல் வேண்டும். அப்படியில்லாத சமயத்தில், தாய் தனது பிள்ளையுடன் இவ்வகையான விடயங்களை பேசக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஆனால் பிரா ஒன்றை வாங்குவதற்கு சரியான நேரம் என்ன? உங்கள் மகளின் உடல் அமைப்பை பொருத்தே சரியான நேரம் அமைந்துள்ளது. பிரா ஒன்றை அணிதலானது உங்கள் மகளுக்கு தன்னம்பிக்கையை வழங்கும் என நீங்;கள் உணர்ந்தால் இதுவே அவளுக்கு பிரா ஒன்றினை அணிவதற்கான ஏற்ற நேரமாகும்.

beginner bra ஒன்றினை வாங்கும் போது அறிய வேண்டிய தகவல்கள்
உங்கள் மகளுடன் பேசி அவரது விருப்பங்களை முதலில் புரிந்துகொள்ளுமாறு உள்ளாடைத் தெரிவுகள் உற்பத்தியில் முன்னோடியான டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனம் உங்களுக்கு பரிந்துரைக்கின்றது. உங்கள் மகள் அணிந்திருக்கும் பிரா சிலவேளைகளில் பொருத்தமானதாக இல்லாத பட்சத்தில், நீங்கள் அவளுக்கு சிறந்த பிரா வகையினை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கலாம். 

இந்த crop-top பிரா தெரிவானது விளையாட்டு போட்டிகளில் வழக்கமாக ஈடுபடும் இளம் பெண்களுக்கு பொருத்தமானதாகும். பிரா வகைகளை முதல்முறையாக அணிபவர்களுக்காக பல தெரிவுகளை இலங்கையில் அறிமுகம் செய்த முதல் வர்த்தகநாமமாக டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனம் திகழ்கிறது. அனைத்து தெரிவுகளும் மேலதிக சௌகரியத்தையும், இயற்கையான உணர்வையும் வழங்குகின்றன. இலங்கையின் அதியுயர் உஷ்ண தன்மைக்கு ஏற்ற வகையில் 90% பருத்தியினாலும், இளம் வயதினரின் உற்சாகமான வாழ்க்கைமுறைக்கு பொருத்தமாக 10% இழுபடும் இலாஸ்டிக்கினாலும் இத் தெரிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலதிக பாதுகாப்புக்காக டபள் லேயர்களாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த தெரிவுகள் வேஸ்ட்டுகளின் கீழே அணிய பொருத்தமானதுடன், குறைந்தது முதல் நடுத்தர ஆதரவு தேவைப்படும் பாடசாலை மாணவர்கள் மற்றும் டீனேஜ் பெண்களுக்கும் மிகவும் ஏற்றது. இதன் அளவுகள் 28AA இல் தொடங்கி 10 அளவுகள் வரை அதிகரித்து செல்கின்றன.

'டீநபinநெச பிரா ஒன்றை வாங்குவது என்பது இளம் பெண்களின் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாகும். டிரையம்ப் இன்டர்நெஷனல் நிறுவனமானது பெண்கள் அணிய வேண்டியதும், அன்னையர் சந்தோஷமாக வாங்கக்கூடியதுமான பிரா வகைகளை அறிமுகம் செய்து அன்னையர் மற்றும் மகள்மார்களுக்கு உதவியுள்ளது. padding அல்லது underwire அற்ற பருத்தியினாலான இந்த பிரா வகைகள் அணிபவருக்கு கனகச்சிதமாக மட்டுமன்றி, அழகிய தோற்றத்தையும் வழங்குகிறது' என டிரையம்ப் இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி அமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மெஜஸ்டிக் சிட்டி, Liberty Plaza, Crescat, Alfred House Gardens, கண்டி சிற்றி சென்டர் மற்றும் K- Zones மொறட்டுவ மற்றும் கப்புவத்தை ஆகிய பிரதேசங்களிலுள்ள டிரையம்ப் பிரத்தியேக காட்சியறைகளில் முன்னெப்போதும் கண்டிராத beginner பிரா வகைகளை தற்போது அன்னையர் மற்றும் இளம் பெண்கள் வாங்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .