2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

அதிகமாக தண்ணீர் குடிப்பதால் 10 ஆயிரம் ஒட்டகங்களைக் கொல்ல முடிவு

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறட்சி பாதித்திருக்கும் அவுஸ்திரேலியாவில், சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களைச் சுட்டுக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தேவைப்படும் தண்ணீரை விட மிக அதிக அளவில் இந்த ஒட்டகங்கள் தண்ணீரை அருந்துவதால், வேறு வழியின்றி, தண்ணீரை மிச்சம் பிடிக்க, சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியாவின் ஏபிஒய் ஊரக நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொல்லும் திட்டம் இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏபிஒய் பகுதியில் இருக்கும் ஏராளமான ஒட்டகங்கள் மற்றும் இதர விலங்குகள், அதிகளவில் நீரைத் தேடிப் பருகுவதால், அப்பகுதி மக்களுக்கு தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி மட்டுமல்லாமல், காட்டுத் தீயாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அவுஸ்திரேலியாவில், கடும் வெப்பம் காரணமாகவே, ஒட்டகங்கள் உட்பட ஏராளமான விலங்குகள் அதிகளவில் தண்ணீர் அருந்துவதாகவும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--