2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பெண்களின் 'டொப்லெஸ்' சூரிய குளியல் குறித்த ஆண்கள் பார்வை

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரிய குளியலின்போது ,பெண்கள் திறந்த மார்புடன் - டொப்லெஸ் ஆக- இருப்பது பற்றி ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து பிரிட்டனில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஆண்களில் பெரும்பாலானோர் தங்களுடைய துணைவி பகிரங்கமான இடங்களில் டொப்லெஸ் ஆக சூரியக்குளியலில் ஈடுபடுவதை விரும்பவில்லையாம்.  ஆனால் மற்ற பெண்கள் கடற்கரையில் திறந்த மேனியுடன் இருப்பதைப் பார்க்க ஆண்கள்  விரும்புகின்றனராம்.

56 சதவீத ஆண்கள் தங்களுடைய துணைவியை விடுமுறைகளின்போது டொப்லெஸ் சூரிய குளியலில் ஈடுபட அனுமதியளிப்பதில்லை என்று ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், மற்ற பெண்கள் ஆடைகள் கலைவதில் தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று 89 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம், இந்த ஆய்வில் பங்குபற்றிய 2392 பெண்களில் 68 சதவீத பெண்கள், தாம் டொப்லஸாக கடற்கரையில் இருப்பதற்கு தாம் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

ஆடை விளிம்பு அடையாளங்களை தவிர்த்துக்கொள்வதற்காகவே டொப்லெஸ்ஸாக சூரிய குளியலில் ஈடுபடுவதற்கு பிரதான காரணம்.
ஆனால் 3 வீதமானோர் சூரிய குளியலில் தம்மைக் காட்சிப்படுத்திக்கொள்ள  விரும்புவதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரித்தானிய பயண முகவர் நிறுவனமொன்றினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் இணை ஸ்தாபகரான கிறிஸ் பிரவுண் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் 'டொப்லெஸ்ஸாக சூரிய குளியலில் ஈடுபடுவதை பலர் விலக்கப்பட்ட விடயமாகக் கருதுகின்றனர். ஆனால் அதிக எண்ணிக்கையான பெண்கள் அப்படி சூரிய குளியலில் ஈடுபடுவதில் மகிழ்ச்சியடைகின்றனர்' என்று கூறியுள்ளார்.
 


  Comments - 0

 • asker Saturday, 25 December 2010 07:21 PM

  அனைவரையும் அல்லா பாதுகாப்பானாக

  Reply : 0       0

  xlntgson Wednesday, 18 August 2010 10:02 PM

  'இந்தியாவின் ஆண்களும் இங்கிலாந்தின் பெண்களும்
  ஆசைகள் அடங்காத ஆட்கள்' (இந்தியா என்பது தெற்காசியாவையே குறிக்கும்) இந்தியர்கள் தான் இம்மாதிரி வெறிக்க வெறிக்க பார்க்கின்றவர்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. மனதுக்குள் இரசிக்கிறார்களோ தெரியாது எல்லோராவும் சீகிரியும் கதைகள் கூறும்! நாகரிகம் பார்வையில் மட்டும் தானா? பேச்சில் இல்லையா, எல்லா பெண்களையும் தாயாக, சகோதரியாக நினைக்கிறவர்கள் இல்லாமல் இல்லை. சுதந்திரத்துக்கு அபாயம் இருக்கிறது சுற்றுலாவுக்கு வரும் பெண்களை பங்கப்படுத்துவதும் இங்கே அதிகம்.

  Reply : 0       0

  Mohamed Thursday, 19 August 2010 02:38 PM

  ஆசை யாரைத்தான் விட்டது. இதனை ஆண்கள் இல்லாத இடங்களில் செய்யலாமே. திரை போட்டு செய்யலாம்.

  Reply : 0       0

  zami Thursday, 19 August 2010 05:04 PM

  கண்ணாஹ்!!! ஆடை இல்லாத பெண்களும், அதை பார்க்காத ஆண்களும் உலகில் வாழ்ந்த சரித்திரமே இல்ல...... ஆஆஆஹ் ஆஆ.............

  Reply : 0       0

  Atheek Friday, 20 August 2010 03:42 AM

  கெட்ட விடயங்களுக்கு ஆள் சேர்க்கிறார்கள்.

  Reply : 0       0

  kuganesan murugiah Sunday, 22 August 2010 10:39 AM

  நான் நினைக்கிறேன் இப்படிப்பட்ட ஆண்களும் உலகில் இருக்கிறார்கள் என்று.

  Reply : 0       0

  sheen Monday, 23 August 2010 09:42 PM

  ஆண்களுக்கு அது பெரும் பிரச்சினை. திறந்த மேனியுடன் அவர்கள் திரிவார்கள். மிக சொற்பமான பெண்களே அதனால் உணர்ச்சி வசமாவார்கள் என்பதனால் அது தொன்று தொட்ட காலமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. வெறும் கோவணத்தோடு வேலை செய்யும் விவசாயியை கண்டு எந்த பெண் நாணுகின்றாள் நண்பரே? பேருந்துகளில் கலுசன் ஜிப் கழன்று போனதுபோல் இருந்தாலும் எந்த பெண்ணும் வெறித்துப்பார்க்க மாட்டார். மாறாக திருப்பிக்கொண்டு போய் விடுவார். சிலர் சிரிப்பதை காணலாம். வேலைக்காரனுடையது வெளியே என்று பழமொழியும் இருக்கிறது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--