2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

‘அனைத்துக்கும் 19ஆவது திருத்தமே காரணம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் இருந்த அதிகாரங்கள் பிரிக்கபட்டமையே, இந்த அரசாங்கத்தை சீராக நடத்த முடியாமல் போனமைக்குக் காரணமாகுமென, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜி,ரி.லிங்கநாதன், நேற்று (03) தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், எல்லை நிர்ணய விடயத்திலும் பல திருப்திகரமற்ற நிலையே நீடித்துவருவதாகவும் எனவே, அது நிச்சயமாக மாற்றபட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

எனவே, பழைய முறைப​டி தேர்தல் நடைபெற வேண்டுமாக இருந்தால், பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இந்த விடயங்களை அறியாமல் ஜனாதிபதி உயர்நீதிமன்றம் வரை சென்றது ஏன் என்பது தனக்கு விளங்கவில்லையெனவும், அவர் மேலும் கூறினார்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .