2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘இளைஞர் - யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

எதிர்வரும் காலங்களில் இளைஞர் - யுவதிகளை முன்னிறுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்த ஈழவர் ஜனநாயக முண்ணனியின் தலைவர் க. துஷ்யந்தன், அவர்களை அரசியல் ரீதியாக  ஒன்றிணைத்து, தமிழ் - சிங்கள மக்களிடையே சகோதர ஒற்றுமையை உருவாக்கி, தமக்கு இருக்கின்ற அடிப்படை, தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார்.

வவுனியாவில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுடனான சந்திப்பின் போது, விரிவாக பேசியிருந்ததாகவும் அதற்கு பசில் சாதகமான பதில்களை தமக்கு வழங்கியிருந்தாரெனவும் தெரிவித்தார். 

கோட்டாபயவுக்கு தமிழ் மக்கள் அதிகமாக வாக்களிப்பார்களென்று எண்ணியிருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் அது நடைபெறவில்லையெனவும் கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசியல் வாழ்க்கை இப்போதுதான் ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்த அவர், எதிர்கால செயற்பாட்டின் மூலம் தான், மக்களின் மனங்களை அவரால் வெல்லமுடியுமெனவும் கூறினார்.

இன்று அமைந்திருக்கின்ற இந்தப் புதிய அரசாங்கம், தமிழர்களின் பிரச்சினைகளில் கூடிய கவனம் செலுத்துமென நம்புவதாகவும், துஷ்யந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக அநல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையெனவும் இதனாலேயே நல்லாட்சி அரசாங்கத்துக்கு தாம் ஆதரவை வழங்கவில்லையெனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .