Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூலை 18 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்
“பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை. இதனால் தான், கிராம மக்கள் ஆகிய நாங்கள் எல்லோரும் இங்கு வந்திருக்கின்றோம்” என கிளிநொச்சி நகர கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனா்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலேயே, மேற்படிக் கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கூட்டமானது, இணைத் தலைவர்களான, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சோனாதிராஜா, அங்கஜன் இராமநாதன் ஆகியோாின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, கிளிநகா் கிராம மக்கள், “தங்களின் காணிப் பிரச்சினை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் எவையும் தீர்த்து வைக்கப்படவில்லை. இறுதியாக, கூட்டுறவாளா் மண்டபத்தில், கடந்தாண்டு ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின் போது, எங்களது பிரச்சினை தீர்க்கப்படும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால், அத்தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. அதனால்தான், மக்களாகிய நாங்கள் வந்திருக்கின்றோம். எங்களுக்குத் தீர்க்கமான முடிவு வேண்டும்” எனத் தெரிவித்தனா்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா, கிளிநகா் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, தனியான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வது எனவும் அதனை, அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் ஏற்பாடு செய்வதாகவும், அங்கு, குறித்த மக்களின் பிரச்சினைகள் தொடா்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனக் கூறினார்.
கடந்தாண்டு ஜனவரி 25ஆம் திகதி இடம்பெற்றதன் பின்னா், கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றே இடம்பெற்றது. இதன்போது, வீட்டுத் திட்டம், கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம், காணி, சமுர்த்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நாடாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினா்களான குருகுலராஜா, பசுபதிபிள்ளை, அரியரத்தினம் மற்றும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago