Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, பூநகரிக் கல்விக் கோட்டத்திற்கு நிரந்தரக் கோட்டக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு, பூநகரி பிரதேச பாடசாலைகளின் நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இவ்வாண்டின் கடந்த நான்காம் மாதத்திலிருந்து பூநகரி கோட்டக் கல்விப் பணிப்பாளர் நேர்முகத் தேர்வின் மூலம் கண்டாவளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். ஆனால் நிரந்தரக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படாததால், கண்டாவளைக் கோட்டக் கல்விப் பணிப்பாளரே பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளராக பூநகரியில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் பூநகரிக்கு நிரந்தரக் கோட்டக் கல்விப் பணிப்பாளரை நியமிப்பதற்கு வடமாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளரும் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago