2021 மே 18, செவ்வாய்க்கிழமை

புதிய பஸ் நிலையம் வேண்டும்: பயணிகள் கோரிக்கை

Gavitha   / 2015 நவம்பர் 22 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு நகரிலுள்ள பிரதான பஸ் நிலையத்தை உடனடியாக நவீன வசதிகளுடன் நிர்மாணித்து தருமாறு பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மிக நீண்ட காலமாக குறித்த பஸ் நிலையம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் தற்காலிகமாக இயங்கி வருவதுடன், பொது மலசல கூட வசதியின்மை, பயணிகள் தரித்து நிற்பதற்கும்  ஓய்வெடுப்பதற்கும் தேவையான கட்டடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றியே காணப்படுவதாகவும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கிவரும் குறித்த பஸ் நிலையத்துக்கு வருகை தரும் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள்; பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த பஸ் நிலையத்துக்கு தனியான இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அந்த இடம், பஸ் நிலையத்துக்குப் பொருத்தமானதாக இல்லையெனவும் அதற்குப் பதிலாக மாற்றுக் காணியை ஒதுக்கி அங்கு சகல வசதிகளுடன் கூடிய பஸ் நிலையமொன்றை நிர்மாணித்துத் தருமாறும் பயணிகளும் தனியார் மற்றும் அரச பஸ் சாரதிகளும், நடத்துனர்களும் கோருகின்றனர்.

தற்போது இருக்கும் பஸ் நிலையம் தாழ் நிலப்பிரதேசத்தில் இருப்பதால், கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக குறித்த பஸ் நிலையம் வெள்ளத்தினால் மூழ்கியதுடன், பயணிகளும்  பஸ்களின் சாரதி மற்றும் நடத்துனர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இது குறித்து பல தரப்பினர்களிடமும் தெரிவித்துள்ள போதிலும் எதுவிதமான நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால், விரைவில் முல்லைத்தீவு நகரில் சகல வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையத்தை நிர்மாணித்து தருமாறு பயணிகளும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களும் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .