Niroshini / 2016 மார்ச் 24 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்
வீட்டுத்திட்டங்கள் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டும் இன்னமும் அந்த வீடுகளில் மீளக்குடியேறமால் இருக்கும் மக்களை விரைவாக அந்த வீடுகளில் குடியேறுமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
'2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில், மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டது. மீள்குடியேறிய மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் மூலம் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
இவ்வாறு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகளில் பலர் மீள்;குடியேறவில்லையென பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன. வீட்டுத்திட்டம் பெற்றும், அந்த வீடுகளில் குடியேறாதவர்களின் விபரங்களை பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்று வருகின்றோம்.
மேலும், வீடுகளை பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பான அறிவித்தல்கள் கிராம அலுவலர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன' என அவர் மேலும் கூறினார்.
34 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
4 hours ago