2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் வீடுகள் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி-விவேகராசா)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் வன்னிப் பிரதேசத்தில் சேதமடைந்த பல வீதிகளும் பாலங்களும் புனரமைக்கப்படவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி மற்றும் புளியம்பொக்கணை வீதியில் நீண்ட காலமாக புனரமைக்கப்படாத பாலம் சுமார் ஏழு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன என  வீதி அபிவிருத்தி திணைக்கள வடமாகாண திட்டப் பணிப்பாளர் ரி-சிவராஜலிங்கம் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--