2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

முல்லைத்தீவு, துணுக்காய் தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் கிடைக்க தவறும் பட்சத்தில் வேறு தொழிலில்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பல ஆண்டுகளாக கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் தமக்கு நிரந்த நியமனம் கிடைக்க தவறும் பட்சத்தில் சேவையிலிருந்து விலகி தாம் வேறு தொழிலை நாடவுள்ளதாக அறிவித்துள்ளனர்

முல்லைத்தீவு வலயத்தில் கடமையாற்றும் 180 தொண்டர் ஆசிரியர்களும், துணுக்காய் வலயத்தில் கடமையாற்றும் 140 தொண்டர் ஆசிரியர்களும் பல ஆண்டுகளாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைவுக்கு மத்தியில், மாணவர்களுடைய கல்வி முன்னேற்றத்திற்கு ஊதியமின்றி நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சேவையாற்றினார்கள.;;

இந்நிலையில், இந்த வருட இறுதிக்குள் நியமனம் கிடைக்காது போனால் விலகிவிட நாம் தீர்மானித்துள்ளோம் என வன்னி தொண்டர் ஆசிரியர் சங்க தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .