Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா நகரில் பரவியுள்ள பாத்தீனியம் செடியை அழிப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் அவை தோல்வியில் முடிவடைந்துள்ளது. தற்போதைய பருவ மழையை அடுத்து பாத்தீனியம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றதை அவதானிக்ககூடியதாகவுள்ளது.
வவுனியா நகரத்தைப் பொறுத்தமட்டில் குளக்கரைகள், மயானங்கள், தெரு ஓரங்கள், மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் மனிதனுடைய சுகாதாரத்திற்கு கேடான இந்த செடி வளர்ந்து வருகின்றது.
வடக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த காலத்தில் அவர்களினால் கொண்டுவரப்பட்ட செம்மறி ஆடுகளின் வயிற்றிலிருந்த குறித்த பாத்தீனியம் செடியின் விதைகள் காரணமாகவே அவை இலங்கையில் பரவலடைந்து பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.
பாத்தீனியத்தின் விதையானது எந்த சூழலிலும் நீண்ட காலத்திற்கு உறங்கு நிலையில் இருக்ககூடியது. ஒரு பூந்துளிரிலிருந்து 20 ஆயிரம் விதை உற்பத்தியாகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
பாத்தீனியம் எதிர்காலத்தில் ஏனைய பயிர்களுக்கு ஒரு சவாலாக இருக்ககூடியதாகவே அமைந்துள்ளது எனலாம். பாத்தீனியம் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என சட்டம் இருந்தாலும் அழிப்பு செயல்பாடுகள் வவுனியாவில் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளது எனலாம்.
5 hours ago
5 hours ago
20 Oct 2025
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
20 Oct 2025
20 Oct 2025