2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஐ.நா. பிரதிநிதி வவுனியா விஜயம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 20 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி,ரி-விவேகராசா)

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி அவசரகால நிவாரண இணைப்பாளர் கதரின் பிறாங் இன்று வியாழக்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்தார்.

வவுனியா இராணுவ விமான நிலையத்தினை வந்தடைந்த நிலையில் அவர், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்து வவுனியா தொடர்பான நிலவரங்களை கேட்டறிந்ததை அடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடம்பெயர்ந்த நிலையில் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கும் ஜக்கிய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களுக்காண பிரதிச்செயலாளரும், அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளருமான கதரின் பிறாங் இன்று பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்க்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--